• May 11 2024

தொப்பையுள்ள ஆண்களை மணமுடிக்க துடிக்கும் பெண்கள்! samugammedia

Tamil nila / Apr 18th 2023, 10:52 am
image

Advertisement

பழங்குடியின மக்களிடம் பாரம்பரிய வழிபாடுகள் இருப்பது வழமையாக இருப்பினும்  திருமணமாகாத ஆண்கள் தொப்பை வளர்ப்பைப் பாரம்பரிய பழக்கமாக கடைபிடிப்பதுடன், அவர்களையே பெண்களும் மணம் முடிக்க விரும்புவதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


அந்த  விநோத பழக்கத்தினை  எத்தியோப்பியாவின்  போடி பழங்குடியினர் கடைபிடிக்கின்றனர்.  அதிக தொப்பையை உடைய ஆண்களையே  அந்த பழங்குடியினர் இனத்தின் வீரராகவும் சிறப்பிக்கின்றனர்.

போடி பழங்குடியினர் தென்கிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமா பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பதுடன் ஓமா நதிக்கரையில் விவசாயம் செய்தும் கால்நடை மேய்ச்சல் நடத்தியும் வாழ்ந்துவருகின்றனர். 



இவர்கள் கேயல் எனப்படும் விழாவைச் சந்திர புத்தாண்டு காலத்தில் கொண்டாடுகின்றனர்.இந்த விழாவில் அந்த இனத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்களிடையே நடத்தப்படும் தொப்பை வளர்க்கும் போட்டியில்  யார் அதிகமாகத் தொப்பை வளர்க்கிறாரோ அவரே இனத்தில் ஹீரோவாக சிறப்பிக்கப்படுவார்.

அதற்காக அந்த விழா தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே  திருமணமாகாத ஆண்கள் இனத்தை விட்டு வெளியேறி தனிமையில் தங்கி தயாராகுவார்கள். அந்த காலப்பகுதியில் வெறும்  ரத்தம் மற்றும் பாலை மட்டுமே  குடிக்க வேண்டும். 

இந்த வழிமுறையானது 4 போடி இனக்கிராமங்களில் நடத்தப்படுவதோடு  போட்டியில் பங்கேற்கவுள்ள ஆண்கள் அனைவரும் கூடி, அந்த இனத்திற்கான புனித மரத்தைச் சுற்றி ஓடுவர்.

அதிக எடைக் காரணத்தினால் அவர்களால் நடக்க இயலாத நிலையில், பெண்கள் அவர்களுக்கு நீர், உத்வேகம் தரும் பாணம் போன்றவற்றைக் கொடுத்து மரத்தைச் சுற்றி முடிக்க உதவி செய்வார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்ற ஆண்களில் அதிக எடைக் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்படுவதுடன், அவர்களையே மணம் முடிக்க பெண்களும் விரும்புகின்றனர்.  இந்த விழாவின் போது ஆண்களைக் தம் பக்கம் இழுக்க பெண்களும் தம்மை அலங்கரித்து பங்கேற்று கொள்வார்கள்.

தொப்பையுள்ள ஆண்களை மணமுடிக்க துடிக்கும் பெண்கள் samugammedia பழங்குடியின மக்களிடம் பாரம்பரிய வழிபாடுகள் இருப்பது வழமையாக இருப்பினும்  திருமணமாகாத ஆண்கள் தொப்பை வளர்ப்பைப் பாரம்பரிய பழக்கமாக கடைபிடிப்பதுடன், அவர்களையே பெண்களும் மணம் முடிக்க விரும்புவதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அந்த  விநோத பழக்கத்தினை  எத்தியோப்பியாவின்  போடி பழங்குடியினர் கடைபிடிக்கின்றனர்.  அதிக தொப்பையை உடைய ஆண்களையே  அந்த பழங்குடியினர் இனத்தின் வீரராகவும் சிறப்பிக்கின்றனர்.போடி பழங்குடியினர் தென்கிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமா பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பதுடன் ஓமா நதிக்கரையில் விவசாயம் செய்தும் கால்நடை மேய்ச்சல் நடத்தியும் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கேயல் எனப்படும் விழாவைச் சந்திர புத்தாண்டு காலத்தில் கொண்டாடுகின்றனர்.இந்த விழாவில் அந்த இனத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்களிடையே நடத்தப்படும் தொப்பை வளர்க்கும் போட்டியில்  யார் அதிகமாகத் தொப்பை வளர்க்கிறாரோ அவரே இனத்தில் ஹீரோவாக சிறப்பிக்கப்படுவார்.அதற்காக அந்த விழா தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே  திருமணமாகாத ஆண்கள் இனத்தை விட்டு வெளியேறி தனிமையில் தங்கி தயாராகுவார்கள். அந்த காலப்பகுதியில் வெறும்  ரத்தம் மற்றும் பாலை மட்டுமே  குடிக்க வேண்டும். இந்த வழிமுறையானது 4 போடி இனக்கிராமங்களில் நடத்தப்படுவதோடு  போட்டியில் பங்கேற்கவுள்ள ஆண்கள் அனைவரும் கூடி, அந்த இனத்திற்கான புனித மரத்தைச் சுற்றி ஓடுவர்.அதிக எடைக் காரணத்தினால் அவர்களால் நடக்க இயலாத நிலையில், பெண்கள் அவர்களுக்கு நீர், உத்வேகம் தரும் பாணம் போன்றவற்றைக் கொடுத்து மரத்தைச் சுற்றி முடிக்க உதவி செய்வார்கள்.இந்த போட்டியில் பங்கேற்ற ஆண்களில் அதிக எடைக் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்படுவதுடன், அவர்களையே மணம் முடிக்க பெண்களும் விரும்புகின்றனர்.  இந்த விழாவின் போது ஆண்களைக் தம் பக்கம் இழுக்க பெண்களும் தம்மை அலங்கரித்து பங்கேற்று கொள்வார்கள்.

Advertisement

Advertisement

Advertisement