• May 02 2024

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - இறுதி போட்டிக்கு தெரிவான ஆர்ஜென்டினா!

Chithra / Dec 14th 2022, 6:54 am
image

Advertisement

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணி தெரிவாகியுள்ளது.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் (13.12.2022) இரவு நடைபெற்றது.

இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதிக்கொண்டன.


இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தியது.

இதற்கமைய 6 ஆவது முறையாக FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா விளையாடுகின்றது.


இரண்டு தடவைகள் உலக சாம்பியனான ஆர்ஜென்டினா முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு குறிவைத்த குரோஷியாவை தோற்கடித்துள்ளது.

1978 மற்றும் 1986 ஆண்டுகளில் ஆர்ஜென்டினா உலக சாம்பியனாகியுள்ளது.

இதற்கு முன்னர் 5 தடவைகள் அரை இறுதிகளில் விளையாடியுள்ள ஆர்ஜென்டினா ஒரு தடவையேனும் அந்த சுற்றில் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - இறுதி போட்டிக்கு தெரிவான ஆர்ஜென்டினா கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணி தெரிவாகியுள்ளது.கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் (13.12.2022) இரவு நடைபெற்றது.இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதிக்கொண்டன.இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தியது.இதற்கமைய 6 ஆவது முறையாக FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா விளையாடுகின்றது.இரண்டு தடவைகள் உலக சாம்பியனான ஆர்ஜென்டினா முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு குறிவைத்த குரோஷியாவை தோற்கடித்துள்ளது.1978 மற்றும் 1986 ஆண்டுகளில் ஆர்ஜென்டினா உலக சாம்பியனாகியுள்ளது.இதற்கு முன்னர் 5 தடவைகள் அரை இறுதிகளில் விளையாடியுள்ள ஆர்ஜென்டினா ஒரு தடவையேனும் அந்த சுற்றில் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement