• Jun 02 2024

மன்னாரில் கடுமையாக தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ! samugammedia

Tamil nila / Jun 17th 2023, 4:07 pm
image

Advertisement

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற  தாக்குதல்  சம்பவத்தில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய  நிலையில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயுதத்தினால்  தலையில்  தாக்கியுள்ளனர்.

இதன் போது  படு காயமடைந்த  குறித்த இளம் குடும்பஸ்தர்   நானாட்டான் பிரதேச   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும்   25 வயதுடைய ஒரு  குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு  சென்ற   முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் கடுமையாக தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு samugammedia மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற  தாக்குதல்  சம்பவத்தில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு குழுக்களுக்கிடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய  நிலையில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயுதத்தினால்  தலையில்  தாக்கியுள்ளனர்.இதன் போது  படு காயமடைந்த  குறித்த இளம் குடும்பஸ்தர்   நானாட்டான் பிரதேச   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும்   25 வயதுடைய ஒரு  குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு  சென்ற   முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement