ஊரடங்கு சோதனை – நடிகர் “துல்கர் சல்மானும்” இப்படி மாறிட்டாரே

0
73

கொரோனா நோயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால் உலக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் உள்ள பிரபலங்கள் தங்களுடைய பொழுதுபோக்கிற்காக ஏதாவது ஒன்று செய்வது வழக்கமாக உள்ளது.

உலகில் பலர் மொபைல் கேம்களுக்கு அடிமையாக உள்ளனர். அதில் குறிப்பாக PUBG கேம், இதை விளையாடாத பிரபலங்கள் மிக மிக குறைவு அந்த அளவுக்கு அனைவரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். இதன் சிறப்பு என்னவென்றால் நண்பர்கள் அருகில் இல்லை என்றாலும் ஆன்லைன் மூலமாக இருக்கும் இடத்தில் உள்ளவாறே நீங்கள் பலருடன் விளையாடலாம். இதனால் நண்பர்கள் அருகில் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த ஊரடங்கிலும் பலரும் வீட்டில் இதையே செய்து வருகிறார்கள்.

கடைசியில் துல்கர் சல்மான் அவர்களும் இந்த விளையாட்டில் விழுந்துவிட்டார். மேலும், இதற்கான வீடியோ ஒன்றை பதிவிட்டு, இந்த கேம் விளையாடுவதற்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த விளையாட்டு மூலமாக வீட்டில் உள்ளபடியே நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுடன், உங்கள் நண்பர்களுடன் விளையாடுங்கள் என்றும் இதனால் நீங்கள் தனிமையை உணராமல் இருப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here