தனித்துவமான பண்டைய காலத்து கல்லறை கண்டுபிடிப்பு

0
87

26-வது வம்சம் என்று அழைக்கப்படும் எல்-சாவி சகாப்தத்திற்கு முந்தைய கல்லறை என்று கண்டறியப்பட்டுள்ளது. 

பழங்காலத்தில் ஆக்ஸிரைஞ்சஸ் என்று அழைக்ப்படும் நகரமான எகிப்தின் பஹ்னாசா இடத்தில் தான் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இக் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மே 17-ம் தேதி கண்டறிந்துள்ளனர். 

தொல்துறையினரின் அறிக்கையின்படி, இதற்கு முன்னர் இதுப்போன்ற கல்லறை கண்டுபிடிக்கப்படவில்லை. 

கல்லறையில் மெருகூட்டப்பட்ட சுண்ணாம் கல்லால் கட்டப்பட்ட ஒரு அறையுள்ளது. 

மேலும் அதன் சுவர்கள் கூரையின் ஆரம்பத்தின் மேலே இருந்து வளைவை கொண்டுள்ளன. 

இது தட்டையாகவும் பெட்டக வடிவிலும் இல்லை. இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற கல்லறைகளில் போன்றும் உள்ளது. 

மேலும் ரோமானிய காலத்திற்கு முந்தைய செதுக்கப்படாத கூரையுடன் கூடிய 8 கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பல ரோமானிய கல்லறகைள், வெண்கல நாணயங்கள், சிறிய சிலுவைகள் மற்றும் களிமண் முத்திரைகள் உள்ளிட்டவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here