ஊரடங்கு காலத்தில் மக்கள் பயன்பெரும் வகையில் முகநூல் நிறுவனம் தனது புதிய ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யக்கூடிய  வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

ஊரடங்கு உத்தரவால்  வெளியே செல்ல முடியாத நிலையில் ஒன்லைன் வர்த்தகத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், எட்ஸி உள்ளிட்டவை நல்ல இலாபத்தை ஈட்டி வருகின்றன.

இந்நிலையில் இதற்கு போட்டியாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஒன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே  வலைதளப்பக்கத்தில் வணிகர்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பேஸ்புக் அப்டேட் செய்திருந்தது. 

தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படத்தப்படும் பொருட்களை நுகர்வோர்கள் ஒன்லைன் மூலம் வாங்கும் வகையில் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் அதிகளவிளான வணிகர்களை உலகளாவிய வர்த்தகத்தில் ஒன்றிணைக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், சிறு வணிக நிறுவனங்களில் பொருட்களையும் உலகளாவிய அளவில் செய்வதே எங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெளியிடப்பட்டுவரும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழுத்த  செய்தாலே பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.

இப்புதிய வசதி இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here