• May 06 2024

நாட்டில் பல பகுதியில் 10 மணித்தியால நீர்வெட்டு! samugammedia

Chithra / Jul 26th 2023, 9:12 am
image

Advertisement

ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மாஹிம்புல, மதுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் பல பகுதியில் 10 மணித்தியால நீர்வெட்டு samugammedia ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மாஹிம்புல, மதுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement