• May 19 2024

வீதி விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் காயம்! samugammedia

Chithra / Jun 5th 2023, 10:47 am
image

Advertisement

பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மியன்குளம் பகுதியில் சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் குழுந்தை ஒன்று உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் 03 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


வீதி விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் காயம் samugammedia பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மியன்குளம் பகுதியில் சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் குழுந்தை ஒன்று உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.காயமடைந்தவர்களில் 03 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement