1000 ரூபா நிவாரண பொதி விவகாரம்-அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

69

சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .500 மில்லியன் இழப்பீடு கோரப்படும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 105 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக ´பாபரா´ என்ற கப்பல் நாளை (13) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நுகர்வோர் விவகாக அதிகார சபையினால் சந்தையில் இருந்து பெறப்பட்ட 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்வகத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன.

இவற்றில் 109 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் இல்லாதது கண்டறியப்பட்டது.

மேலும் 10 மாதிரிகளில் அதிகபட்ச சாத்தியமான அளவை விட குறைவான அஃப்லாடொக்சின் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, மேலும் 06 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் அதிகபட்ச அளவை விட அதிகமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உணவுச் சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளின்படி மாதிரிகள் எதுவும் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என கூறப்படாததால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் கவலையடையத் தேவையில்லை என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் பிரச்சினை தொடர்பாக இலங்கை பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: