• May 12 2024

12 மணிநேர நீர்வெட்டு! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 20th 2023, 9:03 pm
image

Advertisement


சப்புகஸ்கந்தை மின்சார சபை அலுவலகத்தினால் மின்சார விநியோகம் அவசர பணிகளுக்காக தடைசெய்யப்படுவதால், எதிர்வரும் 25ஆம் திகதி (25) சனிக்கிழமை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 8.30 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், களனி, வத்தளை, பியகம, மகர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொட ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

12 மணிநேர நீர்வெட்டு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு SamugamMedia சப்புகஸ்கந்தை மின்சார சபை அலுவலகத்தினால் மின்சார விநியோகம் அவசர பணிகளுக்காக தடைசெய்யப்படுவதால், எதிர்வரும் 25ஆம் திகதி (25) சனிக்கிழமை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 8.30 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.பேலியகொடை, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், களனி, வத்தளை, பியகம, மகர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொட ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Advertisement

Advertisement

Advertisement