• Dec 28 2024

பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை - அரசியல்வாதிகளை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க கூடாது! இராஜாங்க அமைச்சர் அதிரடி

Chithra / Jan 30th 2024, 8:09 am
image

 

பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும்.

எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எதிர்கால நலனை சிந்தித்து செயற்பட வேண்டும்.

மேலும் அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க சில பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், 

அத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தயவு செய்து பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவே உள்ளன.

அரசியல் என்பது அங்கு விவாதிக்கப்படுகிறது. இருப்பினும், அது பாரபட்சமாக இருக்கக்கூடாது. நிகழ்வுகளுக்கு யார் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதை செனட் மற்றும் அதன் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்என்று அவர் தெரிவித்துள்ளார்.


பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை - அரசியல்வாதிகளை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க கூடாது இராஜாங்க அமைச்சர் அதிரடி  பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும்.எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எதிர்கால நலனை சிந்தித்து செயற்பட வேண்டும்.மேலும் அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க சில பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.தயவு செய்து பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவே உள்ளன.அரசியல் என்பது அங்கு விவாதிக்கப்படுகிறது. இருப்பினும், அது பாரபட்சமாக இருக்கக்கூடாது. நிகழ்வுகளுக்கு யார் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதை செனட் மற்றும் அதன் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement