• May 19 2024

13ஐ எதிர்க்கும் பேரினவாதம்: எதிர்வரும் 8ஆம் திகதி 13குறித்து நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

Sharmi / Feb 2nd 2023, 10:24 am
image

Advertisement

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு விசேட உரையினையும் ஆற்றவுள்ளார்.
அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மட்டும இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதியின் உரை அமையும் என தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது தனது கடப்பாடாகும் என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

அரசமைப்பில் உள்ள விடயத்தை தன்னால் மீற முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு சிங்கள தேசியவாத அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

13ஐ எதிர்க்கும் பேரினவாதம்: எதிர்வரும் 8ஆம் திகதி 13குறித்து நாடாளுமன்றில் ரணில் விசேட உரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.9ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு விசேட உரையினையும் ஆற்றவுள்ளார்.அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மட்டும இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதியின் உரை அமையும் என தெரியவருகின்றது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது தனது கடப்பாடாகும் என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். அரசமைப்பில் உள்ள விடயத்தை தன்னால் மீற முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு சிங்கள தேசியவாத அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement