• Jun 15 2024

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு தங்கியிருந்த 17 பேர் கைது! SamugamMedia

Chithra / Mar 16th 2023, 10:27 am
image

Advertisement

மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள்  8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (புதன்கிழமை) இரவு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.

இதன்போது சட்டவிரோத ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம்  அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்துவந்து மட்டக்களப்பு  சுவிஸ்கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு தங்கியிருந்த 17 பேர் கைது SamugamMedia மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள்  8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (புதன்கிழமை) இரவு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.இதன்போது சட்டவிரோத ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம்  அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்துவந்து மட்டக்களப்பு  சுவிஸ்கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement