• May 18 2024

இலங்கையில் பதினெட்டு வீதமான உணவகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Feb 21st 2023, 10:39 am
image

Advertisement

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நாட்டில் உள்ள பல உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவினை தயாரிப்பவர்கள் மிகவும் அழுக்காக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவை வழங்கக்கூடிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை நிறுவும் நோக்கில் உணவினை தயாரிப்பவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதினெட்டு வீதமான உணவகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.தற்போது, ​​உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நாட்டில் உள்ள பல உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவினை தயாரிப்பவர்கள் மிகவும் அழுக்காக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இந்நிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவை வழங்கக்கூடிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை நிறுவும் நோக்கில் உணவினை தயாரிப்பவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement