• Jan 24 2025

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் 200 மில்லியன் டொலர்கள்

Chithra / Jan 23rd 2025, 9:20 am
image

 

அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணை தவிசாளர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) , இலங்கைக்கான தனது இரண்டு நாள் பயணத்தை நேற்று  முடித்துக்கொண்டார்.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசு அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டு மீண்டும் தனது ஆதரவை உறுதி படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த திட்டங்கள் கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னேடுக்கப்படவுள்ளது. 

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் 200 மில்லியன் டொலர்கள்  அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணை தவிசாளர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) , இலங்கைக்கான தனது இரண்டு நாள் பயணத்தை நேற்று  முடித்துக்கொண்டார்.இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசு அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டு மீண்டும் தனது ஆதரவை உறுதி படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, குறித்த திட்டங்கள் கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னேடுக்கப்படவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement