ஒரே மாதத்தில் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

309

இந்தியாவில் 22 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள், ஒரே மாதத்தில் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு அமைய, சமூக வலைதள நிறுவனங்கள் அதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டிருந்தது

எனினும், இந்த சட்டங்களை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்றுக்கொள்ள முதலில் தயக்கம் காட்டிய போதிலும் பிறகு ஏற்றுக்கொண்டது.

அதன்படி, பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய அரசுக்கு அவ்வப்போது கொடுத்து வருகிறது.

அவ்வாறு முடக்கப்படும் எண்ணிக்க புள்ளிவிவரங்களுடன் 2 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் காணப்பட்ட ஜுன் – ஜூலை வரையிலான காலப்பகுதியில் சுமார் 30,27,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 22 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விதிமுறைகளை மீறியது தொடர்பாக 22 லட்சத்து 9 ஆயிரம் வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, முடக்கப்பட்ட கணக்குகளில் 95 சதவிகிதம் போலியானது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: