• May 02 2025

கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

Chithra / May 1st 2025, 9:39 am
image

 

நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிரம்பி வழியும் இந்த முக்கிய நீர்த்தேக்கங்களில், அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், 

அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்களும் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதான நீர்த்தேக்கங்களுடன் மேலதிகமாக, 16க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களிலிரும் நீர் நிரம்பி வழிவதாகவும், 

திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதான மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்புக் கொள்ளளவில் 91%க்கும் அதிகமானவை இப்போது சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்  நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நிரம்பி வழியும் இந்த முக்கிய நீர்த்தேக்கங்களில், அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்களும் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த பிரதான நீர்த்தேக்கங்களுடன் மேலதிகமாக, 16க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களிலிரும் நீர் நிரம்பி வழிவதாகவும், திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதான மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்புக் கொள்ளளவில் 91%க்கும் அதிகமானவை இப்போது சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement