• May 18 2024

ஒரே நாளில் ஓய்வுபெறும் 30,000 அரச ஊழியர்கள்! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Chithra / Dec 29th 2022, 7:42 am
image

Advertisement

டிசம்பர் மாதம் 31ஆம் திகதி 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஓய்வுபெறும் அரச ஊழியர்களில் பாதுகாப்பு பிரிவு, கூட்டுத்தாபனங்கள், சபைகள் என அனைத்து நிறுவன ஊழியர்களும் உள்ளடங்குவதாக அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஓய்வு பெறும் 30,000 பேரின் சம்பளத்தில் 85 வீதத்தை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சுமையை குறைத்து வழங்க சகல வழிகளிலும் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச சேவையை கொண்டு செல்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச சேவை மீள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் ஊடாக அவ்வாறான பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.   

ஒரே நாளில் ஓய்வுபெறும் 30,000 அரச ஊழியர்கள் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை டிசம்பர் மாதம் 31ஆம் திகதி 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஓய்வுபெறும் அரச ஊழியர்களில் பாதுகாப்பு பிரிவு, கூட்டுத்தாபனங்கள், சபைகள் என அனைத்து நிறுவன ஊழியர்களும் உள்ளடங்குவதாக அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, ஓய்வு பெறும் 30,000 பேரின் சம்பளத்தில் 85 வீதத்தை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சுமையை குறைத்து வழங்க சகல வழிகளிலும் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.இதேவேளை, அரச சேவையை கொண்டு செல்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, அரச சேவை மீள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் ஊடாக அவ்வாறான பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement