• May 02 2024

சீனாவில் நாளொன்றுக்கு 36,000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு?

Sharmi / Jan 21st 2023, 9:29 am
image

Advertisement

சீனாவில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 36,000 பேர்கள் கொரோனா பாதிப்பால் இறக்கலாம் என ஆய்வு நிறுவனம் ஒன்று பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவில் மூன்று ஆண்டுகள் நீடித்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதம் தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே சீன அரசாங்கம் முதன்முறையாக மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் உரிய முன்னேற்பாடுகள் எதும் மேற்கொள்ளாத நிலையில், கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்ததுடன், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது 7 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்க இருக்கிறார்கள்.

சீனாவில் லூனார் புத்தாண்டு எதிர்வரும் 22ம் திகதி தொடங்குகிறது. இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கவும், சுற்றுலா செல்லவும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்துவார்கள்.

புத்தாண்டு விடுமுறை நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், இறப்பு விகிதமும் அதிகரிக்கும் என கூறப்படுகிரது.

இந்த நிலையில், புத்தாண்டு விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 36,000 பேர்கள் வரையில் இறக்கலாம் என லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் நாளொன்றுக்கு 36,000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு சீனாவில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 36,000 பேர்கள் கொரோனா பாதிப்பால் இறக்கலாம் என ஆய்வு நிறுவனம் ஒன்று பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளது.சீனாவில் மூன்று ஆண்டுகள் நீடித்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதம் தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே சீன அரசாங்கம் முதன்முறையாக மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.ஆனால் உரிய முன்னேற்பாடுகள் எதும் மேற்கொள்ளாத நிலையில், கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்ததுடன், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது 7 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்க இருக்கிறார்கள்.சீனாவில் லூனார் புத்தாண்டு எதிர்வரும் 22ம் திகதி தொடங்குகிறது. இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கவும், சுற்றுலா செல்லவும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்துவார்கள்.புத்தாண்டு விடுமுறை நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், இறப்பு விகிதமும் அதிகரிக்கும் என கூறப்படுகிரது.இந்த நிலையில், புத்தாண்டு விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 36,000 பேர்கள் வரையில் இறக்கலாம் என லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement