பாராளுமன்ற பொதுத் தேர்தலில புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 429 பேர் போட்டியிடுவதாக புத்தள மாவட்ட செயலாளரும், புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்தார்.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் அவகாசம் அளித்திருந்தது.
அதன் பின்னர் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வேட்புமனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 26 அரசியல் கட்சிகளும், 18 சுயோட்சைக் குழுக்களும் அடங்களாக மொத்தம் 44 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
இதன்போது, 2 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயோட்ச்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சிங்கள தீப ஜாதிக பெரமுன மற்றும் சமபிம கட்சி ஆகிய இரண்டு கட்சிகளே நிராகரிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்தார்.
அதற்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 39 கட்சிகள் போட்டியிடுகின்றன எனவும் அவர் சொன்னார்.
வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தினம் புத்தளம் நகரம் மற்றும் மாவட்டச் செயலகம் என்பன கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அத்துடன், கட்சிகளின் ஆதரவாளர்கள் புத்தளம் பஸ் நிலையத்திற்கு அருகிலும், கொழும்பு - புத்தளம் முகத்திடலிலும் குவிந்த நிலையில் காணப்பட்டதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் 8 பேரை தெரிவு செய்ய 429 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி. பாராளுமன்ற பொதுத் தேர்தலில புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 429 பேர் போட்டியிடுவதாக புத்தள மாவட்ட செயலாளரும், புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்தார்.மேலும், புத்தளம் மாவட்டத்தில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் அவகாசம் அளித்திருந்தது. அதற்கமைய நேற்றையதினம்(11) நண்பகல் 12 மணிவரை புத்தளம் மாவட்ட செயலகத்தில் வேட்பமனுத். தாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வேட்புமனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 26 அரசியல் கட்சிகளும், 18 சுயோட்சைக் குழுக்களும் அடங்களாக மொத்தம் 44 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இதன்போது, 2 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயோட்ச்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.சிங்கள தீப ஜாதிக பெரமுன மற்றும் சமபிம கட்சி ஆகிய இரண்டு கட்சிகளே நிராகரிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்தார்.அதற்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 39 கட்சிகள் போட்டியிடுகின்றன எனவும் அவர் சொன்னார்.வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தினம் புத்தளம் நகரம் மற்றும் மாவட்டச் செயலகம் என்பன கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அத்துடன், கட்சிகளின் ஆதரவாளர்கள் புத்தளம் பஸ் நிலையத்திற்கு அருகிலும், கொழும்பு - புத்தளம் முகத்திடலிலும் குவிந்த நிலையில் காணப்பட்டதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.