• May 13 2024

உக்ரைனுக்கு 46 நாடுகளும் 24 சர்வதேச அமைப்புகளும் உடனடி ஆதரவு!

Tamil nila / Dec 13th 2022, 9:00 pm
image

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இன்று நடந்த உக்ரைனிய உதவிமாநாட்டில் பங்கெடுத்த 46 நாடுகளும் 24 சர்வதேச அமைப்புகளும் தற்போதைய குளிர்காலத்தில் உக்ரைனுக்கு உடனடி ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.


ஐரோப்பாவின் மிகப்பெரிய தலையிடியாக தொடரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்று மீண்டும் ஒரு அனைத்துலக மாநாட்டை பரிஸ் நகரில் நடத்த வைத்திருந்தது.


பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் 46 நாடுகளும் 24 சர்வதேச அமைப்புகளும பங்கெடுத்திருந்தன.


அவையாவும் தற்போதைய குளிர்காலத்தை சமாளிக்க உக்ரைனுக்கு உடனடி ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.


இந்த மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த குளிர்காலத்தை சமாளிக்க 843 மில்லியன் டொலர் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


அவரது கோரிக்கையின் பின்னர் இந்த மாநாட்டில் உக்ரைனுக்காக 421.6 மில்லியன் டொலர் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.


உக்ரைனிய குளிர்காலத்தை ரஷ்யா ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவமாக இந்த மாநாட்டில் குற்றஞ்சாட்டபட்ட நிலையில், உடனடியாக உயர் ஆற்றல் கொண்ட மின் உற்பத்தி இயந்திரங்களில் 63 அலகுகள் விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறியுள்ளார்.


உக்ரைன் முழுவதும் மொத்தம் 800 மின் உற்பத்தி இயந்திரங்கள் விநியோகிக்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிவிக்கபட்டுள்ளது .

உக்ரைனுக்கு 46 நாடுகளும் 24 சர்வதேச அமைப்புகளும் உடனடி ஆதரவு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இன்று நடந்த உக்ரைனிய உதவிமாநாட்டில் பங்கெடுத்த 46 நாடுகளும் 24 சர்வதேச அமைப்புகளும் தற்போதைய குளிர்காலத்தில் உக்ரைனுக்கு உடனடி ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.ஐரோப்பாவின் மிகப்பெரிய தலையிடியாக தொடரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்று மீண்டும் ஒரு அனைத்துலக மாநாட்டை பரிஸ் நகரில் நடத்த வைத்திருந்தது.பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் 46 நாடுகளும் 24 சர்வதேச அமைப்புகளும பங்கெடுத்திருந்தன.அவையாவும் தற்போதைய குளிர்காலத்தை சமாளிக்க உக்ரைனுக்கு உடனடி ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.இந்த மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த குளிர்காலத்தை சமாளிக்க 843 மில்லியன் டொலர் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அவரது கோரிக்கையின் பின்னர் இந்த மாநாட்டில் உக்ரைனுக்காக 421.6 மில்லியன் டொலர் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.உக்ரைனிய குளிர்காலத்தை ரஷ்யா ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவமாக இந்த மாநாட்டில் குற்றஞ்சாட்டபட்ட நிலையில், உடனடியாக உயர் ஆற்றல் கொண்ட மின் உற்பத்தி இயந்திரங்களில் 63 அலகுகள் விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறியுள்ளார்.உக்ரைன் முழுவதும் மொத்தம் 800 மின் உற்பத்தி இயந்திரங்கள் விநியோகிக்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிவிக்கபட்டுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement