• May 12 2024

ஐ.நா.வில் இலங்கை குறித்த 6வது மீளாய்வுக்கூட்டம் நாளை ஆரம்பம்! முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பு SamugamMedia

UN
Chithra / Mar 7th 2023, 9:53 am
image

Advertisement

ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் 6 ஆவது காலாந்தர அறிக்கை கடந்த 2019 பெப்ரவரி 22 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, 6 ஆவது மீளாய்வு நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இம்முறை 6 ஆவது மீளாய்வு செயன்முறையானது இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவின் தலைமையில் கலப்பு வடிவத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை மீளாய்வுக்கூட்டத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் குழுவில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம், நீதியமைச்சு, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சுகாதார அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஐ.நா.வில் இலங்கை குறித்த 6வது மீளாய்வுக்கூட்டம் நாளை ஆரம்பம் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பு SamugamMedia ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.இலங்கையின் 6 ஆவது காலாந்தர அறிக்கை கடந்த 2019 பெப்ரவரி 22 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, 6 ஆவது மீளாய்வு நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.இம்முறை 6 ஆவது மீளாய்வு செயன்முறையானது இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவின் தலைமையில் கலப்பு வடிவத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.அதேவேளை மீளாய்வுக்கூட்டத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் குழுவில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம், நீதியமைச்சு, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சுகாதார அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement