அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இடம்பெற்ற விபத்துக்களில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து 2011 இல் தொடங்கியதுடன் ஆரம்ப ஆண்டில் எந்த உயிரிழப்பு விபத்துகளும் பதிவாகவில்லை.
கடந்த ஆண்டு மட்டும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகளில் 4 பேரும், இந்த ஆண்டு கடந்த 26 நாட்களில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டுதான் அதிக வீதி விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 88 பேர் அதிவேக நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
குறித்த வீதி உரிய தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் கவனமாக வாகனத்தை செலுத்தினால் வீதி விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்களில் 79 பேர் உயிரிழப்பு. அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இடம்பெற்ற விபத்துக்களில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து 2011 இல் தொடங்கியதுடன் ஆரம்ப ஆண்டில் எந்த உயிரிழப்பு விபத்துகளும் பதிவாகவில்லை.கடந்த ஆண்டு மட்டும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகளில் 4 பேரும், இந்த ஆண்டு கடந்த 26 நாட்களில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டுதான் அதிக வீதி விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 88 பேர் அதிவேக நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.குறித்த வீதி உரிய தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் கவனமாக வாகனத்தை செலுத்தினால் வீதி விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.