• Nov 28 2024

காஸாவின் நியூட்டன் ஆனார் 15 வயதுச் சிறுவன்..!samugammedia

mathuri / Feb 6th 2024, 8:31 pm
image

காஸாவில் நடந்துவரும் இஸ்ரேலின் தாக்குதல்களின் மத்தியில் 15 வயதான ஹுசாம் அல் - அத்தார் எனும் சிறுவன் ஒருவர்  'காஸாவின் நியூட்டன்' எனப் பெயர் பெற்றுள்ளார். குறித்த சிறுவன் கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை குலைந்திருக்கும் நிலையில் கிடைத்த பொருட்களை பயன்படுத்தி  மின்சாரம் தயாரித்திருக்கிறான். 

இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்கு காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்துள்ளான் ஹுசாம். இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு இணையதளத்தில் பெரும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது. 

குறித்த விடயம் தொடர்பில் அந்த சிறுவன் தெரிவிக்கையில், 'இருளுக்குள் இருந்த என் சகோரர்களைப் பார்த்தேன். அவர்கள் கண்ணில் பயம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் அளிக்க நினைத்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில், இஸ்ரேல் மொத்த காஸாவினையும் இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில் இந்தச் சிறுவனின் முயற்சி பிரகாசமாகியுள்ளது.

காஸாவின் நியூட்டன் ஆனார் 15 வயதுச் சிறுவன்.samugammedia காஸாவில் நடந்துவரும் இஸ்ரேலின் தாக்குதல்களின் மத்தியில் 15 வயதான ஹுசாம் அல் - அத்தார் எனும் சிறுவன் ஒருவர்  'காஸாவின் நியூட்டன்' எனப் பெயர் பெற்றுள்ளார். குறித்த சிறுவன் கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை குலைந்திருக்கும் நிலையில் கிடைத்த பொருட்களை பயன்படுத்தி  மின்சாரம் தயாரித்திருக்கிறான். இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்கு காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்துள்ளான் ஹுசாம். இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு இணையதளத்தில் பெரும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் அந்த சிறுவன் தெரிவிக்கையில், 'இருளுக்குள் இருந்த என் சகோரர்களைப் பார்த்தேன். அவர்கள் கண்ணில் பயம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் அளிக்க நினைத்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், இஸ்ரேல் மொத்த காஸாவினையும் இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில் இந்தச் சிறுவனின் முயற்சி பிரகாசமாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement