‘வேணாம்..விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம்!

காட்டு ராஜா சிங்கத்தை அசால்டாய் மேலே தூக்கி வீசும் எருமையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

அதனுடைய வலிமைக்கும் கூர்மையான புத்திக்கும் முன்னால் மாபெரும் விலங்குகள் கூட சரணடைகின்றன. அதனை எதிர்கொள்ளும் தைரியத்தை பொதுவாக வேறு எந்த மிருகத்தாலும் திரட்ட முடியாது. காட்டில், சிங்கம் முழு சுதந்திரத்துடன் உலா வருகிறது. எந்த மிருகத்தை வேண்டுமானாலும் அது தனது இரையாக ஆக்கிக் கொள்கிறது.

இருப்பினும், சில விலங்குகளை கண்டால் சிங்கத்துக்கும் சிறு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அப்படிபட்ட ஒரு மிருகம் செய்த ஒரு ஆச்சரியமான செய்கை ஒன்றின் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்தால், சிங்கத்துக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படுமா என ஆச்சரியம் எழுகிறது. இந்த வீடியோ சிங்கம் மற்றும் காட்டு எருமை தொடர்பானது. சிங்கத்தை பார்த்ததுமே எருமை அதன் மீது பாய்கிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் காட்டில் எருமை மாடு ஒன்று அமர்ந்திருப்பதை காண முடிகிறது. அப்போது தூரத்தில் இருந்து வரும் சிங்கத்தின் பார்வை அதன் மீது படுகிறது.

அதை பலியாக்கும் நோக்கத்துடன் முன்னேறி சிங்கம் எருமையைத் தாக்குகிறது. ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. மற்றொரு எருமை அங்கு வருகிறது. சிங்கத்தை நோக்கி ஓடி வரும் அந்த எருமை, அதன் மீது கோபத்தோடு பாய்கிறது.

பின் தனது கொம்புகளால் அதை மீண்டும் மீண்டும் மேலே தூக்கி வீசுகிறது. சிங்கத்திற்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தான் வேட்டையாட வந்த இடத்தில் தன்னையே வேட்டையாடும் எருமையை அதனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை