• May 19 2024

இலங்கையில் நரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! பேராசிரியர் தகவல் samugammedia

Chithra / Aug 23rd 2023, 10:14 am
image

Advertisement

இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் நரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

வசிப்பிட இழப்பு, உணவு கிடைக்காதது, நாட்டின் வீதி வலையமைப்பு விரிவாக்கம் ஆகியனவே நாட்டில் நரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

ஏனைய பாலூட்டிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள நரிகள் சிறப்பு வாய்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இலங்கை நரிகள் மற்ற பாலூட்டிகளைப் போல் இல்லை, அது ஒரு பறவையைப் போலம் தன்மை கொண்டது. அதே போல அழவும் செய்யும். இலங்கையில் இவ்வாறான நடத்தைகளை கொண்ட  மற்றுமொரு பாலூட்டி கருங்குரங்கு மட்டுமே என இந்த ஆராய்ச்சியின் மேற்பார்வை அதிகாரியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் நிபுணர் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விலங்கின் பதின்மூன்று கிளையினங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன . இதன்படி யால, உடவலவ, வில்பத்து, குமண, வஸ்கமுவ போன்ற தேசிய பூங்காக்களில் அதிகளவான குள்ளநரிகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பேராசிரியர் தகவல் samugammedia இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் நரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.வசிப்பிட இழப்பு, உணவு கிடைக்காதது, நாட்டின் வீதி வலையமைப்பு விரிவாக்கம் ஆகியனவே நாட்டில் நரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.ஏனைய பாலூட்டிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள நரிகள் சிறப்பு வாய்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இலங்கை நரிகள் மற்ற பாலூட்டிகளைப் போல் இல்லை, அது ஒரு பறவையைப் போலம் தன்மை கொண்டது. அதே போல அழவும் செய்யும். இலங்கையில் இவ்வாறான நடத்தைகளை கொண்ட  மற்றுமொரு பாலூட்டி கருங்குரங்கு மட்டுமே என இந்த ஆராய்ச்சியின் மேற்பார்வை அதிகாரியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் நிபுணர் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இந்த விலங்கின் பதின்மூன்று கிளையினங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன . இதன்படி யால, உடவலவ, வில்பத்து, குமண, வஸ்கமுவ போன்ற தேசிய பூங்காக்களில் அதிகளவான குள்ளநரிகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement