• Aug 30 2025

மீன் பிடிப்பதற்காக ஆற்றில் இறங்கிய குடும்பஸ்தர் பலி; மட்டக்களப்பில் சோகம்

Chithra / Aug 29th 2025, 12:43 pm
image

மட்டக்களப்பு  - மண்முனை வாவியில் மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் ஆற்றில் இறங்கியவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல் தம்பி தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்முனை வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் ஆற்றில் இறங்கிய இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயுள்ளார்.

உறவினர்களும் பொதுமக்களும் பொலீசாருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோது சடலமாக இவர் மீட்கப்பட்டுள்ளார். 

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


மீன் பிடிப்பதற்காக ஆற்றில் இறங்கிய குடும்பஸ்தர் பலி; மட்டக்களப்பில் சோகம் மட்டக்களப்பு  - மண்முனை வாவியில் மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் ஆற்றில் இறங்கியவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல் தம்பி தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மண்முனை வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் ஆற்றில் இறங்கிய இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயுள்ளார்.உறவினர்களும் பொதுமக்களும் பொலீசாருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோது சடலமாக இவர் மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement