• Nov 26 2024

கிளிநொச்சியில் மர்ம நபரின் தாக்குதலில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு...!

Sharmi / Feb 26th 2024, 2:06 pm
image

கிளிநொச்சியில் இனந்தெரியாத நபரின் தாக்குதலில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் படுத்துறங்கிய குடும்பஸ்தர்  ஒருவர்,   இனந்தெரியாத நபரால் பாரிய தடி ஒன்றினால் முகம் மற்றும்  தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில், படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(25) உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் மர்ம நபரின் தாக்குதலில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு. கிளிநொச்சியில் இனந்தெரியாத நபரின் தாக்குதலில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் படுத்துறங்கிய குடும்பஸ்தர்  ஒருவர்,   இனந்தெரியாத நபரால் பாரிய தடி ஒன்றினால் முகம் மற்றும்  தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதலில், படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(25) உயிரிழந்தார்.குறித்த சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement