• Mar 01 2025

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Tharmini / Mar 1st 2025, 3:46 pm
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 291.19 ரூபாவாகவும், 299.73 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது முறையே 291.40 ரூபாவாகவும், 299.98 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 230,000 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 212,300 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (28) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 232,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 214,100 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2,862.53 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 291.19 ரூபாவாகவும், 299.73 ரூபாவாகவும் உள்ளது.நேற்றைய தினம் (28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது முறையே 291.40 ரூபாவாகவும், 299.98 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) சற்று குறைவடைந்துள்ளது.அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 230,000 ரூபாவாக உள்ளது.22 கரட் தங்கம் ஒரு பவுணானது 212,300 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் (28) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 232,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 214,100 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2,862.53 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement