• May 14 2024

இலங்கையில் முட்டைக்கு ஒரு சட்டம்.. சீனிக்கு ஒரு சட்டம்! எழுந்த புதிய சர்ச்சை

Chithra / Jan 7th 2023, 11:56 am
image

Advertisement

நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தடை இலங்கையில் நடைமுறையில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1200 மெட்ரித் தொன் சீனி சுங்கத்துறையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபா என சுங்கப்பிரிவின் அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றபட்டுள்ள சீனிகளை நேரில் சென்று பார்வையிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய சட்டத்தை மீறி இதனை இறக்குமதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதனால் சிவப்பு சீனியை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது.

அதாவது சிவப்பு சீனி இலங்கையில் உற்பத்தி செய்வதனால் அதனை இறக்குமதி செய்ய முடியாதென தெரிவிக்கும் அரசாங்கம் எவ்வாறு இலங்கையில் முட்டை உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஆனால் வெளிநாட்டு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகின்றது.

இலங்கையில் முட்டைக்கு ஒரு சட்டம். சீனிக்கு ஒரு சட்டம் எழுந்த புதிய சர்ச்சை நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தடை இலங்கையில் நடைமுறையில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1200 மெட்ரித் தொன் சீனி சுங்கத்துறையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.இதன் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபா என சுங்கப்பிரிவின் அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைப்பற்றபட்டுள்ள சீனிகளை நேரில் சென்று பார்வையிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய சட்டத்தை மீறி இதனை இறக்குமதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதனால் சிவப்பு சீனியை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது.அதாவது சிவப்பு சீனி இலங்கையில் உற்பத்தி செய்வதனால் அதனை இறக்குமதி செய்ய முடியாதென தெரிவிக்கும் அரசாங்கம் எவ்வாறு இலங்கையில் முட்டை உற்பத்தி செய்யப்படுகின்றது.ஆனால் வெளிநாட்டு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement