• May 13 2024

தமிழரசுக் கட்சியிலுள்ள ஒரு சட்டத்தரணி பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார் - கஜதீபன் காட்டம்.!

Sharmi / Jan 31st 2023, 3:55 pm
image

Advertisement

தமிழரசுக் கட்சியின் பிரமுகரான சட்டத்தரணி ஒருவர், ரணில் அரசாங்கத்துடன் வெளிப்படையாகவும், கோட்டாபய அரசாங்கத்துடன்  மறைமுகமாகவும் டீல் பேசி அதிகளவான நிதிகளை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் அந்த சட்டத்தரணியை நன்கு கவனித்தீர்கள் என்றால், எப்பொழுதும் வலது கையை மேசைக்கு கீழே வைத்திருந்து பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார் என்றும் அது பணம் வாங்கி பழகிய பழக்க தோசம் என பா.கஜதீபன் குறிப்பிட்டுள்ளார்.

மல்லாகம் கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் இடம்பெற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பா.கஜதீபன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடமராட்சி பிரதேசங்களில் உள்ள மக்கள் வீட்டுச் சின்னத்தை ஒரு சுயேச்சைக் குழு சின்னத்தைப் போன்று நகைச்சுவையாகவே பார்ப்பதாக பா.கஜதீபன் விமர்சித்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பு முடிவெடுத்து, வெற்றியடைந்துள்ளதாக பா.கஜதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் சில சட்டத்தரணிகள் பணத்துக்காகச் செயற்படுகின்றார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் அரசுடன் நெருக்கமாக இருந்து, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்த தயாரிப்பில் ஈடுபட்டு, பெருந்தொகை பணத்தைப் பெற்ற தமிழ் சட்டத்தரணிகள் பற்றிய விவரங்களையும் விரைவில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக பா.கஜதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியிலுள்ள ஒரு சட்டத்தரணி பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார் - கஜதீபன் காட்டம். தமிழரசுக் கட்சியின் பிரமுகரான சட்டத்தரணி ஒருவர், ரணில் அரசாங்கத்துடன் வெளிப்படையாகவும், கோட்டாபய அரசாங்கத்துடன்  மறைமுகமாகவும் டீல் பேசி அதிகளவான நிதிகளை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.தமிழரசு கட்சியின் அந்த சட்டத்தரணியை நன்கு கவனித்தீர்கள் என்றால், எப்பொழுதும் வலது கையை மேசைக்கு கீழே வைத்திருந்து பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார் என்றும் அது பணம் வாங்கி பழகிய பழக்க தோசம் என பா.கஜதீபன் குறிப்பிட்டுள்ளார்.மல்லாகம் கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் இடம்பெற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பா.கஜதீபன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.வடமராட்சி பிரதேசங்களில் உள்ள மக்கள் வீட்டுச் சின்னத்தை ஒரு சுயேச்சைக் குழு சின்னத்தைப் போன்று நகைச்சுவையாகவே பார்ப்பதாக பா.கஜதீபன் விமர்சித்துள்ளார்.அரசியல் தீர்வுக்கான நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பு முடிவெடுத்து, வெற்றியடைந்துள்ளதாக பா.கஜதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்னும் சில சட்டத்தரணிகள் பணத்துக்காகச் செயற்படுகின்றார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் அரசுடன் நெருக்கமாக இருந்து, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்த தயாரிப்பில் ஈடுபட்டு, பெருந்தொகை பணத்தைப் பெற்ற தமிழ் சட்டத்தரணிகள் பற்றிய விவரங்களையும் விரைவில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக பா.கஜதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement