• May 19 2024

விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு தொலைக்காட்சிப் பெட்டியால் நேர்ந்த விபரீதம்! தமிழர் பகுதியில் துயரம் samugammedia

Chithra / Jul 12th 2023, 5:51 pm
image

Advertisement

5 வயதான சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டியொன்று விழுந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறியதாகவும் இதன்போது எதிர்பாராத விதமாக தொலைக்காட்சிப்பெட்டி அவர் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது மயக்கமடைந்த சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு தொலைக்காட்சிப் பெட்டியால் நேர்ந்த விபரீதம் தமிழர் பகுதியில் துயரம் samugammedia 5 வயதான சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டியொன்று விழுந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறியதாகவும் இதன்போது எதிர்பாராத விதமாக தொலைக்காட்சிப்பெட்டி அவர் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விபத்தின் போது மயக்கமடைந்த சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement