• Nov 23 2024

முல்லையில் மாட்டுவண்டி சவாரியில் மாயமான மோட்டார் சைக்கிள்...! பொலிஸார் அதிரடி...!

Sharmi / Feb 20th 2024, 11:10 am
image

முல்லைத்தீவு விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த  ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில்  மாட்டுவண்டி சவாரி கடந்த 18 ஆம் திகதி  இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த நிலையில் வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தினையடுத்து  சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம்(19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்த தேடுதலில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  பிரமந்தனாறினை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் 38, 27 ,25 வயதுடையவர்கள் என்பதும், குறித்த சந்தேக நபர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



முல்லையில் மாட்டுவண்டி சவாரியில் மாயமான மோட்டார் சைக்கிள். பொலிஸார் அதிரடி. முல்லைத்தீவு விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த  ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில்  மாட்டுவண்டி சவாரி கடந்த 18 ஆம் திகதி  இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த நிலையில் வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.இச் சம்பவத்தினையடுத்து  சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம்(19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்த தேடுதலில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  பிரமந்தனாறினை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மூவரும் 38, 27 ,25 வயதுடையவர்கள் என்பதும், குறித்த சந்தேக நபர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement