• May 02 2024

துணிவு ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் சாதனை - ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்!

Sharmi / Jan 2nd 2023, 12:49 pm
image

Advertisement

துணிவு மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.


இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியனது.

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த 24ஆம் தேதி நடந்தது. இதற்கிடையே துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கேங்ஸ்டா என்ற பாடலும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து துணிவு படத்தில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.


அதில், மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், சமுத்திரக்கனி தயாளன் என்ற கதாபாத்திரத்திலும், வீரா ராதா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். மேலும் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. அஜித்தின் கதாபாத்திர பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. ட்ரெய்லரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிலும் அஜித்தின் கதாபாத்திர பெயர் வெளியிடப்படவில்லை.

துணிவு ட்ரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்துக்குள் இதுவரை 3.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் துணிவு ட்ரெய்லரை இதுவரை 20 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில்  20 மில்லியன் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றிருப்பது கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணிவு ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் சாதனை - ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம் துணிவு மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியனது.வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த 24ஆம் தேதி நடந்தது. இதற்கிடையே துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கேங்ஸ்டா என்ற பாடலும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது.இதனையடுத்து துணிவு படத்தில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், சமுத்திரக்கனி தயாளன் என்ற கதாபாத்திரத்திலும், வீரா ராதா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். மேலும் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. அஜித்தின் கதாபாத்திர பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. ட்ரெய்லரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிலும் அஜித்தின் கதாபாத்திர பெயர் வெளியிடப்படவில்லை.துணிவு ட்ரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்துக்குள் இதுவரை 3.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் துணிவு ட்ரெய்லரை இதுவரை 20 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில்  20 மில்லியன் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றிருப்பது கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement