• May 18 2024

நாட்டில் மீண்டும் ஆட்டம் காட்டும் படைப்புழு - பயிர்களை எரிக்கும் விவசாயிகள்

harsha / Dec 12th 2022, 11:54 am
image

Advertisement

அநுராதபுரம் மாவட்டத்தின் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹொரிவில பிரதேசத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரிய சோளத்தோட்டம் படைப் புழுக்களால் தாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஹொரிவில  தோட்டங்களில்  அதிகளவு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து  சோள வயல்களும் படைப்  புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள போதிலும், எந்தவொரு பொறுப்பான அதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை.பல்வேறு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட போதிலும்  படைப் புழுக்களை  அழிக்க முடியவில்லை.

 விதைகள், நிலம் தயார் செய்தல் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழித்து இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளும் 1500 ஏக்கருக்கு மேல் சோளத்தை பயிரிட்டுள்ளதாக ஹொரிவில சோள விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் தமக்கு முதல் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் மீண்டும் ஆட்டம் காட்டும் படைப்புழு - பயிர்களை எரிக்கும் விவசாயிகள் அநுராதபுரம் மாவட்டத்தின் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹொரிவில பிரதேசத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரிய சோளத்தோட்டம் படைப் புழுக்களால் தாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஹொரிவில  தோட்டங்களில்  அதிகளவு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து  சோள வயல்களும் படைப்  புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள போதிலும், எந்தவொரு பொறுப்பான அதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை.பல்வேறு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட போதிலும்  படைப் புழுக்களை  அழிக்க முடியவில்லை. விதைகள், நிலம் தயார் செய்தல் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழித்து இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளும் 1500 ஏக்கருக்கு மேல் சோளத்தை பயிரிட்டுள்ளதாக ஹொரிவில சோள விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் தமக்கு முதல் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement