• May 08 2024

மதுபானப் பிரியர்களுக்கான விசேட அறிவிப்பு- samugammedia

Sharmi / Apr 3rd 2023, 10:14 am
image

Advertisement

நாளாந்தம் மது அருந்துவது உடல் நலனுக்கு கேடில்லை என கனேடிய ஆய்வு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


நாள்தோறும் ஒரு கிளாஸ் பியர் அல்லது வைன் அருந்துவது உடல் நலனை பாதிக்கப் போவதில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அல்கஹோலினால் மனிதனின் ஆயுள் குறுகுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஆபத்துக்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தளவு, நடுநிலையான அளவில் மது அருந்துவோருக்கும், மது அருந்தாதோருக்கும் இடையில் மரணமடையும் சாத்தியப்பாடுகளில் பாரியளவு மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறெனினும் அதிகளவில் மது அருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Canadian Institute for Substance Use Research  என்ற நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

சுமார் 4.8 மில்லியன் பேரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் தகவல் திரட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மதுபானப் பிரியர்களுக்கான விசேட அறிவிப்பு- samugammedia நாளாந்தம் மது அருந்துவது உடல் நலனுக்கு கேடில்லை என கனேடிய ஆய்வு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாள்தோறும் ஒரு கிளாஸ் பியர் அல்லது வைன் அருந்துவது உடல் நலனை பாதிக்கப் போவதில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அல்கஹோலினால் மனிதனின் ஆயுள் குறுகுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஆபத்துக்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தளவு, நடுநிலையான அளவில் மது அருந்துவோருக்கும், மது அருந்தாதோருக்கும் இடையில் மரணமடையும் சாத்தியப்பாடுகளில் பாரியளவு மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் அதிகளவில் மது அருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Canadian Institute for Substance Use Research  என்ற நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.சுமார் 4.8 மில்லியன் பேரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் தகவல் திரட்டின் அடிப்படையில் இந்த ஆய்வு நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement