ஆளும் கட்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தற்போது உள்ளனர், இதற்கு முன்னர், கிட்டத்தட்ட நூற்றி இருபது எம்.பி.க்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரணியில் அமர்வதற்கான வாய்ப்பு அதிகமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் பலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தோடு இருப்பதால், எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அமைச்சர் பொறுப்புகளில் இருந்து விட்டு விலக நேரிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொட்டுக்குள் ஏற்பட்ட பிளவு; அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; எதிரணியில் நாமல் ஆளும் கட்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தற்போது உள்ளனர், இதற்கு முன்னர், கிட்டத்தட்ட நூற்றி இருபது எம்.பி.க்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தனர்.எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரணியில் அமர்வதற்கான வாய்ப்பு அதிகமென தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் பலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தோடு இருப்பதால், எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அமைச்சர் பொறுப்புகளில் இருந்து விட்டு விலக நேரிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.