• Apr 30 2024

யாழில் மரக்கறி வகைகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி...!

Sharmi / Apr 12th 2024, 1:31 pm
image

Advertisement

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

கூடுதலான மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய விலை நிலவரத்தின்படி, 

கத்தரிக்காய் கிலோ 140 ரூபாவாகவும், 

பாகற்காய் கிலோ 200 ரூபாவாகவும், 

பயிற்றங்காய் கிலோ 120 ரூபாவாகவும், 

கோவா கிலோ 120 ரூபாவாகவும், 

வெண்டிக் காய் கிலோ 60 ரூபாவாகவும், 

பூசணிக்காய் கிலோ 120 ரூபாவாகவும், 

பச்சைமிளகாய் கிலோ 140 ரூபாவாகவும், 

தக்காளிப்பழம் கிலோ 120 ரூபாவாகவும், 

மரவள்ளிகிலோ 100 ரூபாவாகவும். 

கீரை ஒரு பிடி80ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழில் மரக்கறி வகைகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி. யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலான மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் நேற்றைய விலை நிலவரத்தின்படி, கத்தரிக்காய் கிலோ 140 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ 200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 120 ரூபாவாகவும், கோவா கிலோ 120 ரூபாவாகவும், வெண்டிக் காய் கிலோ 60 ரூபாவாகவும், பூசணிக்காய் கிலோ 120 ரூபாவாகவும், பச்சைமிளகாய் கிலோ 140 ரூபாவாகவும், தக்காளிப்பழம் கிலோ 120 ரூபாவாகவும், மரவள்ளிகிலோ 100 ரூபாவாகவும். கீரை ஒரு பிடி80ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement