• May 04 2024

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் தமிழர்...! samugammedia

Sharmi / Oct 23rd 2023, 8:19 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை தேர்தல் களத்தில் இறக்குவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் கட்சிகள் இணைந்து நிறுத்துவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளது.



கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தமிழ்க் கட்சிகள் முறையே சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டிருந்தன. இதில் இரண்டு வேட்பாளர்கள் வெற்றியடைந்திருக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேனமட்டுமே வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப் படவில்லை.

இவ்வாறு தொடர்ச்சியாக தென்னிலங்கை தலைவர்களில் ஒருவரை தெரிவு செய்வதும், பின்னர் அவர்கள் ஏமாற்றுவதுமான நிலைமைகள் வரலாறு நெடுகிலும் தொடர் கதையாக உள்ளது. தற்போதைய சூழலில் நாடு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த போதிலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக் கைகள் உள்ளிட்டவை நீண்டு கொண்டுடிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,அதிகாரங்களைப் பகிரப்போவதாக வும்,13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கப்போவதாகவும் அறிவித்து சில கலந்துரையாடல்களை செய்திருந்தார்.

இருப்பினும், அந்தக் கலந்துரையாடல்கள் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்பதோடு தேரர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட நிலைக்கு சென்றிருக்கின்றது.

ஆகவே, அடுத்த ஆண்டு நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளன. அந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க உள்ளிட்டவர்களும் இன்னும் சிலரும் களமிறங்கவுள்ளனர்
என்று தற்போதைக்கு கூறப்பட்டுள்ளது.

இவர்கள் யாரும் தமிழர்களின் விடயத்தில் பகிரங்கமான உடன் பாடுகளை எட்டுவதற்கு தயராக வில்லை. ஆகக்குறைந்தது அரச மைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயார் என்ற அறிவிப்பைச் செய்வதற்கு தயாரில்லாதவர்களாக உள்ளனர்.

ஆகவேதான், தமிழ் கட்சிகளுக்கு இடையில் உடன்பாடுகளை எட்டி,தமிழ் மக்களின் வாக்குகள் அனைத்தும் எம்மால் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்த முயற்சியால் எம்மால் நிறுத்தப்படும் வேட்பாளர் ஜனாதிபதி அரியாசனத்தில் அமரப் போகின்றார் என்பது அர்த்தமல்ல. மாறாக, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தமையால் அவர்கள் தென்னிலங்கை தலைவர்களை நம்பி வாக்களிக்க தயார் இல்லை என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இலக்காக உள்ளது.

மேலும், தென்னிலங்கையில் தற்போதுள்ள கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினால் எந்தவொருவரும் முதலாம் இரண்டாம் சுற்றில் கூட 51சதவீதமானத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும்

நிலையை அடைவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஆகவே தான் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் கட்சிகள் இணைந்து நிறுத்துவதென தீர்மானித்துள்ளோம்.

இதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் இடையே கொள்கையளவிலான இணக்கப்பாடுகள் எட்டப் பட்டுள்ளன. அதேநேரம்,  அடுத்துவரும் நாட்களில் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் பேச்சுகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.




ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் தமிழர். samugammedia எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை தேர்தல் களத்தில் இறக்குவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் கட்சிகள் இணைந்து நிறுத்துவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தமிழ்க் கட்சிகள் முறையே சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டிருந்தன. இதில் இரண்டு வேட்பாளர்கள் வெற்றியடைந்திருக்கவில்லை.மைத்திரிபால சிறிசேனமட்டுமே வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப் படவில்லை.இவ்வாறு தொடர்ச்சியாக தென்னிலங்கை தலைவர்களில் ஒருவரை தெரிவு செய்வதும், பின்னர் அவர்கள் ஏமாற்றுவதுமான நிலைமைகள் வரலாறு நெடுகிலும் தொடர் கதையாக உள்ளது. தற்போதைய சூழலில் நாடு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த போதிலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக் கைகள் உள்ளிட்டவை நீண்டு கொண்டுடிருக்கின்றன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,அதிகாரங்களைப் பகிரப்போவதாக வும்,13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கப்போவதாகவும் அறிவித்து சில கலந்துரையாடல்களை செய்திருந்தார். இருப்பினும், அந்தக் கலந்துரையாடல்கள் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்பதோடு தேரர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட நிலைக்கு சென்றிருக்கின்றது.ஆகவே, அடுத்த ஆண்டு நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளன. அந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க உள்ளிட்டவர்களும் இன்னும் சிலரும் களமிறங்கவுள்ளனர்என்று தற்போதைக்கு கூறப்பட்டுள்ளது.இவர்கள் யாரும் தமிழர்களின் விடயத்தில் பகிரங்கமான உடன் பாடுகளை எட்டுவதற்கு தயராக வில்லை. ஆகக்குறைந்தது அரச மைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயார் என்ற அறிவிப்பைச் செய்வதற்கு தயாரில்லாதவர்களாக உள்ளனர்.ஆகவேதான், தமிழ் கட்சிகளுக்கு இடையில் உடன்பாடுகளை எட்டி,தமிழ் மக்களின் வாக்குகள் அனைத்தும் எம்மால் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.இந்த முயற்சியால் எம்மால் நிறுத்தப்படும் வேட்பாளர் ஜனாதிபதி அரியாசனத்தில் அமரப் போகின்றார் என்பது அர்த்தமல்ல. மாறாக, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தமையால் அவர்கள் தென்னிலங்கை தலைவர்களை நம்பி வாக்களிக்க தயார் இல்லை என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இலக்காக உள்ளது.மேலும், தென்னிலங்கையில் தற்போதுள்ள கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினால் எந்தவொருவரும் முதலாம் இரண்டாம் சுற்றில் கூட 51சதவீதமானத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும்நிலையை அடைவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஆகவே தான் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் கட்சிகள் இணைந்து நிறுத்துவதென தீர்மானித்துள்ளோம்.இதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் இடையே கொள்கையளவிலான இணக்கப்பாடுகள் எட்டப் பட்டுள்ளன. அதேநேரம்,  அடுத்துவரும் நாட்களில் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் பேச்சுகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement