• Jan 26 2025

கல்குடா மஜ்மா நகரில் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கன்றுகள் நடுகை !

Tharmini / Jan 22nd 2025, 12:41 pm
image

வை.எம்.எம்.ஏயின் 75 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பேரவையின் தேசியத்தலைவர் அல் ஹாஜ் அம்ஹர் ஷரீபின் ஆலோசனைக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின்  வழிகாட்டலில் முன்னாள் தலைவர் அல் ஹாஜ் எம்.ரீ.தாஸீம் பவுனீயா, மாவட்டப்பணிப்பாளர் எம்.ஆர்.ஜெமீல், முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான், செயலாளர் ஏ.எல்.லியாப்தீன் ஜேபி, பொருளாளர் எம்.எச்.எம்.ஆசிக் ஆசிரியர் மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, பாலை நகர் கிளைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

கல்குடா மத்திய கிளையின் தலைவர் எம்.ஐ.ஜஹாப்தீன் ஜே.பி தலைமையில் முன்னெடுக்கப்படும் குறித்த திட்டத்திற்கு சிட்டி கார்டன் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



கல்குடா மஜ்மா நகரில் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கன்றுகள் நடுகை வை.எம்.எம்.ஏயின் 75 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பேரவையின் தேசியத்தலைவர் அல் ஹாஜ் அம்ஹர் ஷரீபின் ஆலோசனைக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின்  வழிகாட்டலில் முன்னாள் தலைவர் அல் ஹாஜ் எம்.ரீ.தாஸீம் பவுனீயா, மாவட்டப்பணிப்பாளர் எம்.ஆர்.ஜெமீல், முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான், செயலாளர் ஏ.எல்.லியாப்தீன் ஜேபி, பொருளாளர் எம்.எச்.எம்.ஆசிக் ஆசிரியர் மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, பாலை நகர் கிளைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கல்குடா மத்திய கிளையின் தலைவர் எம்.ஐ.ஜஹாப்தீன் ஜே.பி தலைமையில் முன்னெடுக்கப்படும் குறித்த திட்டத்திற்கு சிட்டி கார்டன் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement