• Jun 29 2024

யாழில் பொலிசாருக்கு அச்சுறுத்தல்...! பேருந்து சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!samugammedia

Sharmi / Sep 21st 2023, 9:16 am
image

Advertisement

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பேருந்து சாரதிக்கு 10 ஆயிரம் ரூபாய் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு ஆள் பிணையிலும் பருத்தித்துறை நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 15 ஆம் திகதி அன்று மந்திகை சந்தியில் வீதி கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் சாரத்தியம் தொடர்பில் அறிவுறுத்திய நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்ற பேருந்து சாரதி அன்றைய தினமே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (20) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சாரதியை பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கை அடுத்த வருடம் நான்காம் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


யாழில் பொலிசாருக்கு அச்சுறுத்தல். பேருந்து சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.samugammedia பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பேருந்து சாரதிக்கு 10 ஆயிரம் ரூபாய் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு ஆள் பிணையிலும் பருத்தித்துறை நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார். கடந்த 15 ஆம் திகதி அன்று மந்திகை சந்தியில் வீதி கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் சாரத்தியம் தொடர்பில் அறிவுறுத்திய நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்ற பேருந்து சாரதி அன்றைய தினமே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (20) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சாரதியை பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கை அடுத்த வருடம் நான்காம் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement