• Apr 26 2024

யாழின் முக்கிய இடத்தில் காணப்பட்ட பாரம்பரிய சுமைதாங்கி புனரமைப்பு!samugammedia

Sharmi / May 22nd 2023, 11:29 am
image

Advertisement

இன்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகே உள்ள சுமைதாங்கி புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த சுமைதாங்கி என்பது முன்னோர்களால் அமைக்கப்பட்டது. வீதியால் செல்லும்போது களைப்பு ஏற்பட்டால் பொருட்களை சுமைதாங்கி மேல் வைத்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு என இது உருவாக்கப்பட்டது.

தற்கால சந்ததியினருக்கு சுமைதாங்கியோ, அல்லது அதன் உபயோகங்களோ தெரியாமல் போயுள்ள நிலையில், அதன் பயன்பாட்டை எடுத்து காட்டும் முகமாக இவ்வாறு வர்ணம் பூசி புனரமைக்கப்பட்டுள்ளது.

தொல்புரம் பகுதியைச் சேர்ந்த ந. யுகதீபன் என்ற இளைஞனே இவ்வாறு அதனை புனரமைப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழின் முக்கிய இடத்தில் காணப்பட்ட பாரம்பரிய சுமைதாங்கி புனரமைப்புsamugammedia இன்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகே உள்ள சுமைதாங்கி புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.இந்த சுமைதாங்கி என்பது முன்னோர்களால் அமைக்கப்பட்டது. வீதியால் செல்லும்போது களைப்பு ஏற்பட்டால் பொருட்களை சுமைதாங்கி மேல் வைத்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு என இது உருவாக்கப்பட்டது.தற்கால சந்ததியினருக்கு சுமைதாங்கியோ, அல்லது அதன் உபயோகங்களோ தெரியாமல் போயுள்ள நிலையில், அதன் பயன்பாட்டை எடுத்து காட்டும் முகமாக இவ்வாறு வர்ணம் பூசி புனரமைக்கப்பட்டுள்ளது.தொல்புரம் பகுதியைச் சேர்ந்த ந. யுகதீபன் என்ற இளைஞனே இவ்வாறு அதனை புனரமைப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement