• Apr 28 2024

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் பதிவான வித்தியாசமான சாதனை

Chithra / Dec 27th 2022, 7:16 am
image

Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்தியாசமான ஆனால் தனித்துவமான சாதனையை, நியூஸிலாந்து நிகழ்த்தியுள்ளது.

விக்கட் காப்பாளர் ஒருவர், எதிரணி ஒன்றின் ஆரம்ப ஆட்டக்கார்கள் இருவரை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச்செய்த முதல் விக்கட் காப்பாளர் மற்றும் முதல் அணி என்ற சாதனையே அதுவாகும்.

கராச்சி தேசிய மைதானத்தில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

4வது ஓவரில் ஷபீக்கை ஸ்டம்பிங் மூலம் அஜாஸ் படேல் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து பிரேஸ்வெல் 7வது ஓவரில் மசூத்தை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார்.

இந்தநிலையில் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கீப்பர் ப்ளண்டல் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் பதிவான வித்தியாசமான சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்தியாசமான ஆனால் தனித்துவமான சாதனையை, நியூஸிலாந்து நிகழ்த்தியுள்ளது.விக்கட் காப்பாளர் ஒருவர், எதிரணி ஒன்றின் ஆரம்ப ஆட்டக்கார்கள் இருவரை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச்செய்த முதல் விக்கட் காப்பாளர் மற்றும் முதல் அணி என்ற சாதனையே அதுவாகும்.கராச்சி தேசிய மைதானத்தில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.4வது ஓவரில் ஷபீக்கை ஸ்டம்பிங் மூலம் அஜாஸ் படேல் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து பிரேஸ்வெல் 7வது ஓவரில் மசூத்தை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார்.இந்தநிலையில் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கீப்பர் ப்ளண்டல் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். 

Advertisement

Advertisement

Advertisement