• Nov 26 2024

யாழில் கொலைக் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது...!

Sharmi / Jul 3rd 2024, 3:25 pm
image

யாழ் மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று(02) சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 20 திகதி  இரவு வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த குடும்பஸ்தர் ஒருவர்  ஓலமிட்ட போது,  மக்களால் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (01) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்,  சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்மணியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்,  44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சரவணபவானந்தம் சிவகுமார் என தெரிவிக்கப்படுகிறது.


யாழில் கொலைக் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது. யாழ் மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று(02) சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 20 திகதி  இரவு வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த குடும்பஸ்தர் ஒருவர்  ஓலமிட்ட போது,  மக்களால் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (01) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார்.குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்,  சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்மணியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்,  44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சரவணபவானந்தம் சிவகுமார் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement