• May 19 2024

லொட்டரி இயந்திரத்தில் தவறான பொத்தானை அழுத்திய பெண்ணிற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக கிடைத்தது.

Tharun / Apr 5th 2024, 8:52 pm
image

Advertisement

அமெரிக்காவின் மாகாணமாகிய வர்ஜீனியாவில்  அதிஸ்டலாப சீட்டு இயந்திரத்தில் தற்செயலாக தவறான பொத்தான் ஒன்றினை அழுத்திய பெண்ணிற்கு 1மில்லியன் அமெரிக்க டெலர் பரிசாக விழுந்து  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லொட்டரி விற்பனை இயந்திரத்தில் தற்செயலாக தவறான பொத்தானை அழுத்திய ஒரு வர்ஜீனியா பெண் தனது தவறுக்காக $1 மில்லியன் பவர்பால் பரிசை வென்றார்.

அமெரிக்காவின் கிறிஸ்டியன்ஸ்பர்க்கில் வசிக்கும் மிரியம் லாங் என்ற பெண்   பிளாக்ஸ்பர்க்கில்  தெற்கு மெயின் தெருவில் உள்ள CVS இல்  லொட்டரி விற்பனை இயந்திரத்தை பார்வையிட்டு    ஒரு மெகா மில்லியன் டிக்கெட்டை வாங்க விரும்பியுள்ளார். மெகா மில்லியன் டிக்கற் வாங்குவதற்கான பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக தற்செயலாக தவறான பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் தனக்கு மார்ச் 18 ஆம் தேதி பவர்பால் விளையாட்டுக்கான டிக்கெட் கிடைத்ததாக லாங் கூறினார்.

அவர் பவர்பால் விளையாட்டுக்கான டிக்கெட்டில் உள்ள முதல் ஐந்து வெற்றி எண்களைப் பொருத்தியபோது அவருக்கு  1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக கிடைத்தது. இது பற்றி அப்பெண் குறிப்பிடுகையில் இது என் வாழ்நாளில் நான் செய்த பெரிய தவறு. 1மில்லியன் அமெரிக்க டொலர் வெற்றிபெற்ற தருணம் என் இதயத்தின் துடிப்பு அதிகமாக இருந்ததனை நான் உணர்ந்தேன் எனக் குறிப்பிட்டார்.

லொட்டரி இயந்திரத்தில் தவறான பொத்தானை அழுத்திய பெண்ணிற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக கிடைத்தது. அமெரிக்காவின் மாகாணமாகிய வர்ஜீனியாவில்  அதிஸ்டலாப சீட்டு இயந்திரத்தில் தற்செயலாக தவறான பொத்தான் ஒன்றினை அழுத்திய பெண்ணிற்கு 1மில்லியன் அமெரிக்க டெலர் பரிசாக விழுந்து  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.லொட்டரி விற்பனை இயந்திரத்தில் தற்செயலாக தவறான பொத்தானை அழுத்திய ஒரு வர்ஜீனியா பெண் தனது தவறுக்காக $1 மில்லியன் பவர்பால் பரிசை வென்றார்.அமெரிக்காவின் கிறிஸ்டியன்ஸ்பர்க்கில் வசிக்கும் மிரியம் லாங் என்ற பெண்   பிளாக்ஸ்பர்க்கில்  தெற்கு மெயின் தெருவில் உள்ள CVS இல்  லொட்டரி விற்பனை இயந்திரத்தை பார்வையிட்டு    ஒரு மெகா மில்லியன் டிக்கெட்டை வாங்க விரும்பியுள்ளார். மெகா மில்லியன் டிக்கற் வாங்குவதற்கான பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக தற்செயலாக தவறான பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் தனக்கு மார்ச் 18 ஆம் தேதி பவர்பால் விளையாட்டுக்கான டிக்கெட் கிடைத்ததாக லாங் கூறினார்.அவர் பவர்பால் விளையாட்டுக்கான டிக்கெட்டில் உள்ள முதல் ஐந்து வெற்றி எண்களைப் பொருத்தியபோது அவருக்கு  1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக கிடைத்தது. இது பற்றி அப்பெண் குறிப்பிடுகையில் இது என் வாழ்நாளில் நான் செய்த பெரிய தவறு. 1மில்லியன் அமெரிக்க டொலர் வெற்றிபெற்ற தருணம் என் இதயத்தின் துடிப்பு அதிகமாக இருந்ததனை நான் உணர்ந்தேன் எனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement