• Mar 16 2025

யாழில் இருந்து வந்து கனகராயன்குளத்தில் திருட்டு: இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடிப்பு..!

Sharmi / Mar 15th 2025, 11:25 pm
image

யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நிலையில் இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கனராயன்குளம் பொலிஸாரிடம் இன்றையதினம்(15)  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த சில இளைஞர்கள் நேற்றையதினம்(14) இரவு தொலைபேசி மற்றும் தங்க நகைகள் என்பவற்றை திருடிச் சென்றனர்.

இதன்போது, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குழுவை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (15) அதிகாலை சிக்கியுள்ளார்.

ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர். மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள, கனகராயன்குளம் பொலிசார், கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


யாழில் இருந்து வந்து கனகராயன்குளத்தில் திருட்டு: இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடிப்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நிலையில் இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கனராயன்குளம் பொலிஸாரிடம் இன்றையதினம்(15)  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த சில இளைஞர்கள் நேற்றையதினம்(14) இரவு தொலைபேசி மற்றும் தங்க நகைகள் என்பவற்றை திருடிச் சென்றனர்.இதன்போது, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குழுவை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (15) அதிகாலை சிக்கியுள்ளார். ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர். மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள, கனகராயன்குளம் பொலிசார், கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement