• May 18 2024

நாரையுடன் நட்பை வளர்த்த இளைஞன்..! தலையீடு செய்து பிரித்த அரசு..!SamugamMedia

Sharmi / Mar 24th 2023, 5:36 pm
image

Advertisement

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவருடன் நட்பாக பழகி வந்த நாரையினை பிரித்து பறவைகள் சரணாலயத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப் ஒரு ஆண்டுக்கு முன்னர் வயல்வெளியில் காயமுற்ற நிலையில்  பரிதவித்த  நாரை ஒற்றிற்கு  மருந்து போட்டு குணப்படுத்தினார்.

அந்நிலையில் குறித்த  நாரை ஆரிஃபை விட்டு பிரிந்து  செல்லாது ஒருவருட காலமாக அவருடனே வாழ்ந்து வந்தது. ஆரிஃப் உண்ணும் தட்டிலேயே அதுவும் சேர்ந்துண்ணும் அளவிற்கு பாசத்துடனும் அவரது குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது.

ஆரிஃப் எங்கு சென்றால் நாரையும் அவருடன் சென்றது. அவ்வாறான காணொளிகள்  சமூக வலைத்தளத்தில் வைரலானமையால்  ஆரிஃப்  மற்றும் நாரைக்கிடையிலான  நட்பு குறித்து அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், ஆரிஃபிடமிருந்து  நாரையை உத்தரப் பிரதேச வனத்துறை  அதிகாரிகள் எடுத்துசென்றுள்ளனர்.   பின்னர் இயற்கையான சூழலில் நாரை இருக்க வேண்டும் என்பதற்காக ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரிஃப் , நாரை இடையேயான நட்பு குறித்து கேள்விப்பட்ட அகிலேஷ் யாதவ் , நேரில் சென்று பார்வையிட்டதுடன் அது தொடர்பான புகைப்படங்களையும்  தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் நாரை, பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்ட செய்தி வெளியானதையடுத்து, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த நாரையை காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில்,

உத்தரப்பிரதேச வனத்துறையினரால் அமேதியில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு ரேபரேலியில் உள்ள சமஸ்பூர் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட நாரையை தற்போது காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியமானது  பேசப்படவேண்டிய விவகாரம் என்பதுடன்  பாஜக அரசு உடனடியாக நாரையை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் பறவை ஆர்வலர்கள் கொந்தளிக்க நேரிடும்  என்றும்  அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

நாரையுடன் நட்பை வளர்த்த இளைஞன். தலையீடு செய்து பிரித்த அரசு.SamugamMedia உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவருடன் நட்பாக பழகி வந்த நாரையினை பிரித்து பறவைகள் சரணாலயத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப் ஒரு ஆண்டுக்கு முன்னர் வயல்வெளியில் காயமுற்ற நிலையில்  பரிதவித்த  நாரை ஒற்றிற்கு  மருந்து போட்டு குணப்படுத்தினார்.அந்நிலையில் குறித்த  நாரை ஆரிஃபை விட்டு பிரிந்து  செல்லாது ஒருவருட காலமாக அவருடனே வாழ்ந்து வந்தது. ஆரிஃப் உண்ணும் தட்டிலேயே அதுவும் சேர்ந்துண்ணும் அளவிற்கு பாசத்துடனும் அவரது குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது.ஆரிஃப் எங்கு சென்றால் நாரையும் அவருடன் சென்றது. அவ்வாறான காணொளிகள்  சமூக வலைத்தளத்தில் வைரலானமையால்  ஆரிஃப்  மற்றும் நாரைக்கிடையிலான  நட்பு குறித்து அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.இந்நிலையில், ஆரிஃபிடமிருந்து  நாரையை உத்தரப் பிரதேச வனத்துறை  அதிகாரிகள் எடுத்துசென்றுள்ளனர்.   பின்னர் இயற்கையான சூழலில் நாரை இருக்க வேண்டும் என்பதற்காக ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆரிஃப் , நாரை இடையேயான நட்பு குறித்து கேள்விப்பட்ட அகிலேஷ் யாதவ் , நேரில் சென்று பார்வையிட்டதுடன் அது தொடர்பான புகைப்படங்களையும்  தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்நிலையில் நாரை, பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்ட செய்தி வெளியானதையடுத்து, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த நாரையை காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில், உத்தரப்பிரதேச வனத்துறையினரால் அமேதியில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு ரேபரேலியில் உள்ள சமஸ்பூர் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட நாரையை தற்போது காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியமானது  பேசப்படவேண்டிய விவகாரம் என்பதுடன்  பாஜக அரசு உடனடியாக நாரையை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் பறவை ஆர்வலர்கள் கொந்தளிக்க நேரிடும்  என்றும்  அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement