• May 19 2024

இடிந்து விழுந்த சுமார் ஐம்பது பாடசாலை கட்டடங்கள்: கல்விச் செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Oct 9th 2023, 8:28 am
image

Advertisement

 

கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் ஐம்பது பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கட்டிடங்களில் கல்விகற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இடிந்து விழுந்த கட்டிடங்களில் சில முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும், சில கட்டிடங்கள் புனரமைக்கப்படும் நிலையில் இருப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்ட பணம் ஒதுக்கப்படும் என்றும் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு மாதங்களில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண கல்விச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இடிந்து விழுந்த சுமார் ஐம்பது பாடசாலை கட்டடங்கள்: கல்விச் செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் samugammedia  கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் ஐம்பது பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்த கட்டிடங்களில் கல்விகற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.இடிந்து விழுந்த கட்டிடங்களில் சில முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும், சில கட்டிடங்கள் புனரமைக்கப்படும் நிலையில் இருப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்ட பணம் ஒதுக்கப்படும் என்றும் செயலாளர் கூறியுள்ளார்.மேலும் இரண்டு மாதங்களில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண கல்விச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement