புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவராவார்.
நேற்று அதிகாலை 1.15 மணியளவில் புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள
ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கண்டி பெரெதெனியா பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த மகளை ஏற்றுவதற்காக
அதிகாலை பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மேற்படி நபர் சென்றுகொண்டிருந்த போது
அதே திசையில் பயணித்த பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ராக்டர் வண்டியின் பெட்டியுடன் மோதுண்டு உயர்ந்துள்ளார்.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பலாலி - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் விபத்து; ஒருவர் பலி புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவராவார். நேற்று அதிகாலை 1.15 மணியளவில் புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கண்டி பெரெதெனியா பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த மகளை ஏற்றுவதற்காக அதிகாலை பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மேற்படி நபர் சென்றுகொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ராக்டர் வண்டியின் பெட்டியுடன் மோதுண்டு உயர்ந்துள்ளார்.சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.