• Apr 14 2025

சிவனடிபாத மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்

Chithra / Apr 13th 2025, 8:57 am
image

 

சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நாச்சிலந் தெனிய பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஹேமாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த வேலையில் ஊசி மலை பகுதியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்ந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனடிபாத மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்  சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.நாச்சிலந் தெனிய பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஹேமாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த வேலையில் ஊசி மலை பகுதியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதன்போது அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்ந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவரது உடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement